இச்சை முதலியவைகளைப் பற்றி உண்டாகின்ற துன்பத்தை நிவர்த்தி செய்விப்பதில் வரும் இன்பம் அபர இன்பமாகும். அவை இம்மையில் அனுபவிக்கின்ற இன்பங்களில் சிலவென்றறிய வேண்டும். அவை எவையென்னில்:- உடுப்பதற்கு வஸ்திரமில்லாமலும், இருப்பதற்கு இடமில்லாமலும், உழுவதற்கு நிலமில்லாமலும், பொருந்துவதற்கு மனைவியில்லாமலும், விரும்பியபடி செய்வதற்குப் பொருள் முதலிய வேறு வேறு கருவிகளில்லாமலும் துன்பப்படுகின்ற சீவர்கள் விஷயத்தில் சீவகாருணியந் தோன்றி, உடுப்பதற்கு வஸ்திரம், இருப்பதற்கு இடம், உழுவதற்கு நிலம், பொருந்துவதற்குப் பெண், விரும்பியபடி செய்வதற்குப் பொருள் முதலானவை கொடுத்தபோது, பெற்குக்கொண்டவர்களுக்கு உள்ளிருந்து முகத்தினிடமாகத் தோன்றுகின்ற இன்ப விளக்கமும், அந்த இன்பத்தைக் கண்டு கொடுத்தவர்களுக்கு உண்டாகின்ற இன்ப விளக்கமும் கடவுள்கரணத்தில் ஏகதேசமும் சீவகரணத்திற் பூரணமுமாகத் தோன்றுகின்றவை யாகலால் அது அபர இன்பமென் றறியவேண்டும். கல்வி அறிவு செல்வம் போகம் முதலியவைகளைக் குறித்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.
The bliss that arises on relieving the sufferings regarding desire etc., is called the next grade of compassion. It should be known that they are some of the pleasures enjoyed in this worldly life. They are: When compassion to the beings who suffer without clothes to wear, without places to reside, without lands to till, without (woman) a wife for coition, without money or other aid similar to it to do as one pleases and when clothes are given to wear, place is given to reside, land is given woman is given for coition and money or similar aids given to fulfill their desires, then the bliss that manifests on the face of those who have received from deep down their being manifests on the faces of those who have given, on seeing the above bliss appear partially in God's suitable instruments and fully in the being's suitable instruments.
If the house-holders, who are filled with sorrow, for their lack of education, knowledge, wealth and pleasure, observe the policy of feeding the hungry poor in accordance with their capacity, taking it as their only vow, that practice of compassion alone, will provide them with education, knowledge, wealth and pleasure.
-Thiru ArutPrakasa Vallalar (திரு அருட்பிரகாச வள்ளலார்
)
JEEVAKARUNYAM (ஜீவகாருண்யம்)
|
|
IN ENGLISH
|
In TAMIL
|
No comments:
Post a Comment